Theme images by merrymoonmary. Powered by Blogger.

சத்யா HD

Just 400 mb only 
பிரிவுவகை:Mystery த்ரில்லர்
நடிகர்கள்:சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்தராஜ், சதீஷ், யோகி பாபு
இயக்குனர்:பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்பாளர்:நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி
எழுதியவர்:அதிவி சேஷ்
பாடல்கள்:சைமன்.கே.கிங்
‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஜாக்சன் துரை’, ‘கட்டப்பாவக் காணோம்’, ‘போக்கிரி ராஜா’ என சின்ன பட்ஜெட்டில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களில் நடித்திட நடிகர் சிபிராஜ் முக்கியத்துவம் கொடுத்தாலும், அவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே ரசிக்கும்படியும் வெற்றிப்படமாகவும் அமைந்திருந்தன. இந்நிலையில் சுவாரஸ்யமான திரைக்கதைக்காக பெரிதும் பாராட்டப்பட்டு வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படமான ‘க்ஷணம்’ திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கினார் சிபிராஜ். சென்ற ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற ‘சைத்தான்’ திரைப்படத்தின் இயக்குனரான பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் பரிந்துரையில் இந்த ரீமேக்கை இயக்க ஒப்பந்தமானார். தெலுங்கில் பாராட்டுக்களையும் வசூலையும் வாரிக் குவித்த ‘க்ஷணம்’ திரைப்படத்தின் தரத்திற்கு ஈடுகொடுத்துள்ளதா சிபிராஜின் ‘சத்யா’? தெரிந்து கொள்ள, தொடர்ந்து படியுங்கள்.

வெளிநாட்டில் வேலை பார்த்து அங்கேயே செட்டில் ஆகிவிட்ட சத்யாவிற்கு (சிபிராஜ்) சில வருடங்களுக்கு முன் தான் உயிருக்கு உயிராக காதலித்த சென்னையிலிருக்கும் ஸ்வேதாவிடமிருந்து (ரம்யா நம்பீசன்) அழைப்பு வருகிறது. தனது குழந்தை கடத்தப்பட்டுவிட்டதாகவும், போலீஸ் அதிகாரிகளோ தன் கணவரோ மற்ற எவருமோ அந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாகவும், குழந்தையைக் கண்டுபிடிக்க தனக்கு சத்யாவின் உதவி தேவை எனவும் கெஞ்சி கேட்கிறாள். பல நாட்கள் தேடலுக்கு பிறகும் குழந்தையும் கிடைக்கவில்லை, எந்த கேள்விக்கும் பதிலும் கிடைக்கவில்லை; மாறாக, புதுப்புது கேள்விகளும் குழப்பங்களும் மட்டுமே உருவாகிக்கொண்டிருக்கும் சூழலில் குழந்தையை தேடும் இந்த பயணம் என்னவாகிறது என்பதே ‘சத்யா’ திரைப்படத்தின் கதை.

‘க்ஷணம்’ திரைப்படம் மிகக் குறைவான லாஜிக் ஓட்டைகளைக் கொண்ட படு சுவாரஸ்யமானதொரு mystery த்ரில்லர். ‘அதுத்து என்ன நடக்குமோ?’ ‘யார் தான் வில்லன்?’ ‘ஏன் இதெல்லாம் நடக்கிறது?’ என பல கேள்விகளுக்கான பதில்களை படத்தின் இறுதி வரை ரசிகர்களை கணிக்கவிடாமல், எக்கச்சக்க எதிர்பாராத சம்பவங்கள் மற்றும் திருப்பங்களைக் கொண்ட ரொம்பவே விறுவிறுப்பான ஒரு திரைப்படம் ‘க்ஷணம்’. சின்ன சின்ன விஷயங்களையும் எளிமையாகவும் புதுமையாகவும் திரையில் கொண்டு வந்த விதமாகட்டும், சஸ்பென்ஸ் தருணங்களை எல்லாம் ஒவ்வொன்றாக அதிக பில்டப் இல்லாமல் வெளிப்படுத்தியதாகட்டும், ஃபிளாஷ்பேக் காட்சிகளையும் குழந்தையை பற்றி விசாரிக்கும் காட்சிகளையும் முன்னும் பின்னுமாக மாற்றி non-linear முறையில் அற்புதமாக கதை சொல்லும் விதமாகட்டும் தெலுங்கு சினிமாவின் த்ரில்லர்களில் ‘க்ஷணம்’ ஒரு டிரெண்ட்செட்டர் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை, எவ்வளவு சுமாராக எடுத்தாலும் கூட கண்டிப்பாக பார்க்கும்படி இருக்கும். அந்த வகையில் ‘சத்யா’ திரைப்படக் குழுவினருக்கு அதிக சிரமமில்லை.

‘சத்யா’ திரைப்படத்தைப் பொறுத்தவரையில், தெலுங்கு திரைப்படத்திலிருந்து அதிக மாற்றங்கள் எதுவும் செய்யாமல் அப்படியே சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்திட வேண்டும் என்றே முயற்சித்திருக்கிறார்கள். ஒரிஜினல் வெர்ஷனில் வரும் ஃபிளாஷ்பேக்கில் கல்லூரியில் நடப்பதைப் போல் வரும் காதல் காட்சிகளை மட்டும், சிபிராஜின் வயதிற்கு பொருந்தும் வகையில் அலுவலக சூழலில் நடப்பதை போல மாற்றியிருக்கிறார்கள். அதே போல, சிபிராஜின் கதாபாத்திரத்தை தாய் தந்தை இல்லாதவராக மாற்றியுள்ளார்கள் (அது, இந்த கதைக்கும் கிளைமாக்ஸில் வரும் திருப்புமுனைக்கும் நியாயம் செய்யும் வகையில் சரியாகவே இருந்தது). டைரக்ஷன் பகுதியில் ஆங்காங்கே தடுமாற்றங்கள் இருந்தாலும் கூட, திரைக்கதையில் எந்த இடத்திலும் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். முதல் பாதி முழுக்க பரபரவென நூல் பிடித்தாற்போல் நகர்கிறது; படத்தின் கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் பதற்றத்தை நமக்குள்ளும் கடத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பாதியில் சில முக்கியமான காட்சிகளில் நடிப்பிலும் காட்சிகளை இயக்கிய விதத்திலும் சறுக்கல்கள் இருந்தாலும் கூட, ஒட்டுமொத்தமாக அயற்சியை ஏற்படுத்தாத ஒரு நல்ல திரில்லராகவே இருந்தது ‘சத்யா’.

‘சத்யா’ திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் – இப்படத்தின் பின்னணி இசை. தெலுங்கு படத்தின் பின்னணி இசை நன்றாக இருக்கும் என்றாலும் கூட, அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு அட்டகாசமான பின்னணி இசை மூலம் காட்சிக்கு காட்சி பதற்றம் கூட்டுகிறார் இசையமைப்பாளர் சைமன் K கிங். ‘யவ்வனா’ மற்றும் ‘காதல் ப்ராஜக்ட்’ பாடல்களும் கூட, முதல்முறை கேட்கும்பொழுதே மனதில் பதிந்துவிட்டது. இறுக்கமானதொரு பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் தரத்தை உயர்த்திடும் வகையில் பலம் சேர்த்திருப்பது அருண்மணி பழனியின் ஒளிப்பதிவும், கௌதம் ரவிச்சந்திரனின் படத்தொகுப்பும்.

‘சத்யா’ திரைப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் – இப்படத்தின் நடிகர், நடிகையர் தேர்வு. குறும்புத்தனமான ஐடி பையன், சற்றே சீரியஸ் ஆன NRI என்கிற இரண்டு காலகட்டத்தைக் காட்டும் பாத்திரங்களில் எதிலுமே சிபிராஜ் நிறைவாக தெரியவில்லை. ஆங்காங்கே ஒரு சில காட்சிகளில் ஆர்ப்பாட்டமில்லாமல் நடிக்கும்பொழுது நன்றாக இருந்தாலும், உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டியிருந்த பல காட்சிகளில் தேவையான நடிப்பை சிபிராஜ் வெளிப்படுத்தவில்லை என்பதே உண்மை; சில முக்கியமான காட்சிகளில், நிறையவே தடுமாறியிருக்கிறார். அது மட்டுமின்றி, படம் முழுக்க அவர் பயன்படுத்தியிருக்கும் ‘விக்’ வேறு படு கொடூரமாக இருந்தது. கதாநாயகி ரம்யா நம்பீசன், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் ‘பாபு கான்’ சதீஷ் அவர்களின் நடிப்பும் கூட மிகவும் செயற்கையாகவே இருந்தது; ரம்யா நம்பீசனின் நடிப்பு பல காட்சிகளில் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பாகவே தெரிந்தது. கேரள போலீஸாக வரும் பாலாஜியின் நடிப்பெல்லாம் அநியாயத்திற்கும் செயற்கையாக, அந்நியமாக தெரிந்தது. எந்த அலட்டலும் இல்லாமல் மிக இயல்பான நடிப்பில் பட்டையைக் கிளப்பியவர் என்றால், காவல் அதிகாரியாக வரும் நடிகர் ஆனந்தராஜை சொல்லலாம். அவர் வரும் எல்லா காட்சிகளிலுமே கைத்தட்டலுக்கு பஞ்சமில்லை. படத்தின் இன்னொரு முக்கியமான மைனஸ் – சில முக்கிய காட்சிகளில் டைரக்ஷனில் காணப்படும் அமெச்சூர்னஸ். அதே போல, தெலுங்கு படத்தைப் போலவே எடுக்கிறேன் பேர்வழி என நடிகர்கள் அணியும் உடைகளின் கலர், கதாபாத்திரங்களின் பெயர்கள், சாதாரண காட்சிகளில் வரும் சின்ன வசனங்களைக் கூட அப்படியே தமிழில் மொழிபெயர்த்திருப்பது எல்லாம் ஒரு சில இடங்களில் கடுப்படிக்கவே செய்தது.

‘சத்யா’ – ஒரு முறை பார்த்து ரசிக்கக்கூடிய சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் த்ரில்லர்!

No comments